வேலை தேடி… வேலையாளை தேடி…

காலை 11.30. வழக்கமான வேலை நாள். தண்ணீர், NOTEPAD, அதன் மேல் ஒரு பேனா, மாத நாட்காட்டி மேலும் சில அலங்கார பொருட்களால் சூழப்பட்ட என் கணிணியில் நான் வேலை செய்துகொண்டு இருந்தேன். திடிரென்று என் கைபேசி சிணுங்கியது… “மச்சி என்னோட கம்பெனி-ல Front-end Developer-கு opening இருக்கு. HR எவ்ளோ try பண்ணாலும் நல்ல profile கிடைக்க மாட்டிக்குதாம். யாராச்சும் refer பண்ண சொல்றாங்க.”, என்று சொல்லிக்கொண்டே தொடர்ந்தான்…